May I please have the meaning of the saptapadi mantras during Srivaishnava weddings? Thanks and regards.

  • Home
  • May I please have the meaning of the saptapadi mantras during Srivaishnava weddings? Thanks and regards.
0
0

May I please have the meaning of the saptapadi mantras during Srivaishnava weddings? Thanks and regards.

  • You must to post comments
0
0

Answer:  According to Banineeya Soothram, the versus "Saapthaptheena sakyam" which specify about walking together with someone for seven steps, that makes them friends for ever. The entire marriage rituals are said to be with calling the bridegroom as Sri Mahavishnu and the bride is offered His partner for ever. It has very essense of our day to day life briefs, coded and condensed in versues. The specific Sapthapathy, (walking seven steps together) the most important ritual without wich no marriage can be said to conlude. Even is not valid legally, if the Sapthapathy has not taken place according to the Hindu marriage act!

1) Ekamishe vishnudhwaa anvEthu | = May this first step bring alongwith you, all the material needs for our normal life;
2) Dhwe oorjee, vishnudhwaa anvEthu | = Physical and mental strenth to grow and develop with this second step;
3) thrinEE vrathaaya vishnudhwaa anvEthu | = May your step help us stick to the rituals and regular duties of a Brahman, such as Homam, Regular prayer etc. ;
4) chathwaari maayO bhavaaya, vishnudhwaa anvEthu | = May this fourth step bring alongwith you the pleasures, pleasantries and peace be with us;
pancha pasubhya: vishnudhwaa anvEthu | = With this fifth step, the full benefits of nauture, cow and alike be with;
shatdrupya: vishnuddhwaa anvEthu | May the Lord bless us with all the natural benefits, with all Rithu. the seasons greet us; and
saptha sapthapyO, hOthchaabyO, vishnudhwaa anvEthu | the 7th step brings us together to perform all the Yaga, Yagnja together with His Blessings.

Just for the sake of easy understanding, I give the same in Tamil for everyone to understand it clearly.

ஸத் என்றால் ஏழு, பதீ என்பது பாதம் என்ற சொல்லைத் தழுவியது, அதாவது ஏழு அடிகள் எடுத்து வைப்பதை ஸப்த பதீ என்கிறோம், இது தான் விவாஹத்தின் மிக முக்கிய அம்சம். மணமகன் பெண்ணின் வலது பாத கட்டை விரலை தன் வலது கரத்தால் பிடித்துக் கொண்டு ஏழு முறை சிறிது சிறிதாக நகர்த்த வேண்டும்; ஸப்தப்தீ நடக்கவில்லை என்றால், விவாஹம் பூர்த்தியாகாது! அதற்கான மந்திரம்:

ஏகமிஷே விஷ்ணுஸ்த்வாந்வேது;
த்வே ஊர்ஜே விஷ்ணுஸ்த்வாந்வேது;
த்ரிணீ வ்ரதாய விஷ்ணுஸ்த்வாந்வேது,
சத்வாரி மயோப வாய விஷ்ணுஸ்த்வாந்வேது,
பஞ்ச பசுப் ய: விஷ்ணுஸ்த்வாந்வேது,
ஷட்த்ருதுப் ய: விஷ்ணுஸ்த்வாந்வேது,
ஸப்த ஸப்தப்யோ ஹோத்சாப்யோ விஷ்ணுஸ்த்வாந்வேது.
(விஷ்ணுத்வா+அந்வேது = விஷ்ணுத்வாந்வேது)

இந்த முதல் அடியை வைக்கும்போது (தான்ய விருத்தியும், அன்னபானாதிகளின் விருத்தியின் பொருட்டும்) 2ல் உடல் வலிமை, மனவலிமையின் பொருட்டும் 3-ல் விரதாதிகளுக்கு உதவும் பொருட்டும், 4,ல் சுகத்திற்காகவும், நன்மைகள் பொருட்டும் 5,ல் பசு முதலானவைகளுக்கு உதவும் பொருட்டும் 6,ல் பருவங்களின் நன்மை பெறும் பொருட்டும், கடைசியில் 7,ம் அடியில் யாகயக்ஞங்களை குறைவறச் செய்ய அருளுமாறும் விஷ்ணுவின் அனுக்ரஹம் நமக்கு எப்பொழுதும் கிடைக்கட்டும். இல்லறத்தில் உணவு உடல் நலம் மனநலம்
தனதான்ய பசு, பால் விருத்தி பருவகாலங்களின் அனுகூலம், பெரியோர்களின் ஆசிர்வாதம் இவைகள் மிக முக்கியம். இவை பெற கொஞ்ச தூரம் நாம் இருவரும் சேர்ந்து வந்தால் சகா அதாவது சினேகிதர்களாகுவிட்டோம், நீ என்னை விட்டு விலகாதிருப்பாய், நாம் இருவரும் சேர்ந்து என்ன செய்ய வேண்டும் என்று சங்கல்பம் செய்யலாம், என்று அடுத்த மந்திரம் கூறுகிறது. பாணினீய சூத்ரத்தில் ஸாப்தபதீனம் ஸக்யம் என்று வரும். அதாவது இரண்டு பேர் ஏழு அடிகள் ஒன்றாகச் சேர்ந்து போனால் இருவரும் சினேகிதர்கள் ஆகும்

ஸகா ஸப்தபதா ப வ ஸகாயௌ ஸப்தபதா ப பூ வஸக் யந்தே க மேகம் ஸக் யாத்தே மாயோஷம் ஸக் யாந்மே மாயோஷ்டா; ஸமயாவ ஸங்கல்பா வஹை ஸம்பிரியௌ ரோசிஷ்ணு ஸுமனஸ்யாநௌ.

இந்த மந்திரங்கள் கணவனும் மனைவியும் ஸ்னேகிதர்களாக வாழ்நாட்கள் பூராவும் பகவதனுக்ரஹத்துடன் வாழ ப்ரார்த்திக்கின்றன. இப்படி மனதிற்கு இனிமையானதும் ஸ்ரேஷ்டினமானதும் ஆகிய மந்திரங்களை ஓதி இருவரும் முன்போல் கரங்களைப் பற்றியவாறு அக்னியை வலம் வர வேண்டும்.

  • You must to post comments
Showing 1 result
Your Answer

Please first to submit.