Kuzhi-TharpaNam-Theettu-TharppaNam-Njathi-Kunda-TharpaNam

  • Home
  • General
  • Kuzhi-TharpaNam-Theettu-TharppaNam-Njathi-Kunda-TharpaNam

ஞாதி தர்ப்பணம் (அல்லது) குழி தர்ப்பணம்

முக்ய குறிப்பு 1 : கர்மா பண்ணுமிடம் தவிர, (கர்த்தா கர்மா செய்யுமிடம் தவிர) வேறு இடங்களில் செய்வதானால் வாஸோதக தர்ப்பணம் கிடையாது.  பொதுவாக, ஏதேனும் குளக்கரை, நதிக்கரை அல்லது கிணற்றங்கரையில் அல்லது திறந்தவெளியில் மட்டுமே செய்யலாகும். மூடிய இடங்களில், குடியிருப்புகள் அல்லது ஃப்ளாட் போன்ற இடங்களில் செய்யலாகாது. மண் தரையில் செய்வது உத்தமம். மண் தரையின்றி வேறு இடமாயின், சிறிதளவு மணல் பரப்பி, அதன்மீதும் தர்ப்பணம் செய்யலாம்.

முக்ய குறிப்பு 2: பத்தாவது நாள் வெள்ளிகிழமை வருமாயின், ஞாதிகள் 9ம் நாள் அன்றே க்ஷௌரம் பண்ணிக்கொள்ளவும். கர்த்தாக்கள் மட்டும் 10வது நாளன்றுதான் க்ஷௌரம் செய்துகொள்ளவேண்டும். மரித்தவர், வயதில் சிறியவராயின், வயதில் பெரிவர்கள் க்ஷௌரம் செய்துகொள்ளவேண்டியதில்லை.

முக்ய குறிப்பு 3 : கீழ்கண்ட ஸங்கல்பத்தில், கோடிட்ட இடங்களில், வருஷம், அயனம், ருதௌ, மாஸம், பக்ஷம், திதி, வார நக்ஷத்திரம் முதலிய விவரங்களை பஞ்சாங்கத்திலிருந்து குறித்துக்கொள்ளவும். தர்ப்பணம் ஆண்களுக்காயின்  ‘கோத்ரஸ்ய/சர்மண என்றும், பெண்களுக்காகில் கோத்ராயா/நாம்ன்யா’ என்று மாற்றி சொல்லிக்கொள்ளவும்.

காலயில் தீர்த்தாமாடி, ஈர ஒற்றை வேஷ்டியுடன் (உத்ரீயமின்றி),  ஸ்ரீசூர்ணமில்லாமல் திருமண் மட்டும் இட்டுக்கொண்டு, ப்ராதஸ்-ஸந்த்யாவந்தனம் முடித்து, கை, கால்களை அலம்பி, இரண்டுமுறை ஆசமனம் செய்யவும். பிறகு, கிழக்குமுகமாக அமர்ந்து, ஒரு தர்ப்பத்தினாலான பவித்ரம் அணிந்து, (கையில் சில்லரையாகவைத்துக்கொண்டு, கீழ்கண்டபடி சொல்லவும்):

(மரித்தவர் புருஷரானால்)> __________________கோத்ரஸ்ய_______________சர்மண: மம ஞாதி ப்ரேதஸ்ய..

(மரித்தவர் ஸ்த்ரீகளானால்)> __________________கோத்ராயா: _____________நாம்ந்யா: மம ஞாதி ப்ரேதாயா:அத்ய தஸமேஹனி தஹன ஜனித க்ஷூத்த்ருணா சாந்தியர்த்தம், தேஹ ஆப்யாயனார்த்தம், திலோதக ப்ரதானி கர்த்தும், யோக்யதாஸித்திம் அனுக்ரஹாணாம் என்று சொல்லி, கையில் வைத்திருக்கும் சில்லரையை தரையில் சேர்க்கவும்.  பின்னர், கைகளை அலம்பிக்கொண்டு, உபவீதம், ப்ராணாயாமம். ஒரு இருக்குப் புல்லுடன் ஸங்கல்பம்:

ஶுக்லாம்பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம், ப்ரஸந்நவதனம் த்யாயேத் சர்வ விக்நோப சாந்தயே; யஸ்யத்வ்ரத வக்த்ராத்யா: பாரிஷயத்யா: பரச்சதம்; விக்நம் நிக்நந்தி ஸததம் விஷ்வக்ஸேநம் தமாஸ்ரயே *(ப்ராசீனாவீதி)*

ஹரிஓம்தத் – ஸ்ரீ கோவிந்த கோவிந்த கோவிந்த: அஸ்ய ஸ்ரீபகவத, மஹாபுருஷஸ்ய விஷ்ணோராக்ஞயா, ப்ரவர்த்தமாநஸ்ய ஆத்யப்ரம்மண: த்விதீய பரார்த்தே, ஸ்ரீஶ்வேத வராஹகல்பே, வைவஸ்வத மந்வந்தரே, கலியுகே, ப்ரதமே பாதே, ஜம்பூத்வீபே, பாரத வர்ஷே, பரத கண்டே, சகாப்தே, மேரோ:, தக்ஷிணே பார்ஶ்வே, அஸ்மின் வர்த்தமானே, வ்யவஹாரிகே, ப்ரபவாதி ஷஷ்டி ஸம்வத்ஸராணாம் மத்யே, ___________நாம ஸம்வத்ஸரே, ___________________அயனே, ______________ருதௌ, _____________________மாஸே ______________பக்ஷே, ____________திதௌ, ________________வாஸர யுக்தாயாம், ___________________நக்ஷத்ர யுக்தாயாம், ஸ்ரீவிஷ்ணுயோக, ஸ்ரீவிஷ்ணுகரண, ஏவம்குண விஸேஷண வஸிஷ்டாயாம், அஸ்யாம் ____________திதௌ, ஸ்ரீபகவதாக்ஞ்யா…..

வடகலையார் >>> ஸ்ரீமன் நாராயண ப்ரீதியர்த்தம்..

தெங்கலையார் >> ஸ்ரீ பகவத் கைங்கர்ய ரூபம்

ஸ்மார்த்தாள் >> ஸ்ரீ பரமேஸ்வர ப்ரீதியர்த்தம்   _____________(கோத்ரஸ்ய/கோத்ராயா) _______________ (ஸர்மண: / நாம்ந்யா) ப்ரேதஸ்ய /ப்ரேதாயா: மம ஞாதி பூதஸ்ய (பூதாயா: ) அத்ய தஸமேஹனி தஹன ஜனித க்ஷூத்த்ருணா தாஹ தாப உபசமனார்த்தம், ப்ரேதாப்யாயனார்த்தம்,  ப்ரேத த்ருப்தியர்த்தம், நதி தீரே (தடாக தீரே அல்லது குண்டதீரே) அதீத ப்ரமதினமாரப்ய, அத்ய தஸம தினபர்யந்தானி அஹரஹ: கர்த்தவ்யானி பஞ்சஸப்ததி திலோதக ப்ரதானி அத்ய கரிஷ்யே (இடுக்குப்புல்லை வலதுபுறம் போடவும்).

 உபவீதம். ஸாத்வீக த்யானம் :- பகவாநேவ ஸ்வநீயாம்ய ஸ்வரூபஸ்திதி ப்ரவ்ருத்தி ஸ்வஷேதைகரஸேந அநேந ஆத்மாநாகர்த்ரா ஸ்வகீயைஸ்ச உபகரணை: ஸ்வாராதனைக ப்ரயோஜனாய பரமபுருஷ: ஸர்வ ஸேஷீ ஸ்ரிய: பதி: ஸ்வஶேஷ பூதமிதம் __________________(கோத்ரஸ்ய/கோத்ராயா) ___________________ (ஶர்மண: / நாம்ன்யா) ப்ரேதஸ்ய/ப்ரேதாயா தஸமதினே திலோதக ப்ரதானார்க்யம் கர்ம ஸ்வஸ்மை ஸ்வப்ரீதயே ஸ்வயமேவ காரயதி.

பிறகு, ப்ராசீனாவீதி – மண் பரப்பியுள்ள குண்டத்தில், தெற்கில் நுனி இருக்கும்படி சேர்த்து,  அதில் –

புருஷர்களானால் > “ஆயாஹி  மம ஞாதி பூதப்ரேத ஸோம்யாகம்பீரை: பதிபி: பூர்வ்யை: ப்ரஜாமஸ்மப்யம் ததத்ரயிஞ்ச தீர்க்காயுத்வம்ச சதசாரதம்ச என்று சொல்லி கறுப்பு எள்ளினால் ஆவாஹனம் > _____________________கோத்ரம்_________________ஸர்மணாம் மம ஞாதிபூத ப்ரேதம் அஸ்மின் தர்ப்பே ஆவாஹயாமி” என்று சொல்லி எள்ளை சேர்க்கவும்.  ஞாதிபூதப்ரேதஸ்ய இதமாஸனம் என்று ஒரு தர்ப்பத்தை சேர்த்து எள்ளும் ஜலமும் விடவேண்டியது.ஸ்த்ரீகளாயின் > “ஆயாஹி  மம ஞாதி பூதப்ரேத ஸோம்யே கம்பீரை: பதிபி: பூர்வ்யை ப்ரஜாமஸ்மப்யம் தததீரயிஞ்ச தீர்க்காயுத்வம்ச சதசாரதம்ச_______________________கோத்ராயா_________________நாம்நீம் மம ஞாதிபூத ப்ரேதாம் அஸ்மின் தர்ப்பே ஆவாஹயாமி, ஞாதிபூத ப்ரேதாயா: இதமாஸனம், தூஷ்ணீம் திலோதகம் என்று சொல்லி ஒரு தர்ப்பாஸனம் சேர்க்கவும்.

தர்ப்பணம்:

______________கோத்ரஸ்ய/கோத்ராயா _______________சர்மண: /நாம்னீம் மம ஞாதி ப்ரேதஸ்ய/ப்ரேதாயா –

  1. அதீத ப்ரதமேஹனி கர்த்தவ்யம் /தாதவ்யம் திலோதகம் ததாமி (மூன்று முறை எள்ளும் ஜலமும் கட்டைவிரல் வழியாக விடவும்)
  2. அதீத த்விதியேஹனி கர்த்தவ்யம்/தாதவ்யம் திலோதகம் ததாமி (நான்கு முறை  முறை எள்ளும் ஜலமும் கட்டைவிரல் வழியாக விடவும்)
  3. அதீத த்ருதியேஹனி கர்த்தவ்யம்/தாதவ்யம் திலோதகம் ததாமி (ஐந்து முறை எள்ளும் ஜலமும் கட்டைவிரல் வழியாக விடவும்)
  4. அதீத சதுர்த்தேயஹனி கர்த்தவ்யம்/தாதவ்யம் திலோதகம் ததாமி (ஆறு முறை எள்ளும் ஜலமும் கட்டைவிரல் வழியாக விடவும்)
  5. அதீத பஞ்சமேஹனி கர்த்தவ்யம்/தாதவ்யம் திலோதகம் ததாமி (ஏழு முறை எள்ளும் ஜலமும் கட்டைவிரல் வழியாக விடவும்)
  6. அதீத ஷஷ்டேஹனி கர்த்தவ்யம்/தாதவ்யம் திலோதகம் ததாமி (எட்டு முறை எள்ளும் ஜலமும் கட்டைவிரல் வழியாக விடவும்)
  7. அதீத ஸப்தமேஹனி கர்த்தவ்யம்/தாதவ்யம் திலோதகம் ததாமி (ஒன்பது முறை எள்ளும் ஜலமும் கட்டைவிரல் வழியாக விடவும்)
  8. அதீத அஷ்டமேஹனி கர்த்தவ்யம்/தாதவ்யம் திலோதகம் ததாமி (பத்து முறை எள்ளும் ஜலமும் கட்டைவிரல் வழியாக விடவும்)
  9. அதீத நவமேஹனி கர்த்தவ்யம்/தாதவ்யம் திலோதகம் ததாமி (பதினோரு முறை எள்ளும் ஜலமும் கட்டைவிரல் வழியாக விடவும்)

10, அதீத தஸமேஹனி கர்த்தவ்யம்/தாதவ்யம் திலோதகம் ததாமி (பனிரெண்டு முறை எள்ளும் ஜலமும் கட்டைவிரல் வழியாக விடவும்)

பிறகு, எழுந்து கைகூப்பி, _______________கோத்ராணாம்/கோத்ரா ____________________சர்மணாம்/நாம்னீம் மம ஞாதிபூத ஏதானி பஞ்சப்திதி திலோதகானி உபதிஷ்ட: என்று சொல்லி, சொம்பு நிறைய ஜலம் எடுத்து சொம்பின் வாயை வலதுகையால் மூடியபடி கவிழ்த்து, வலதுகை கட்டைவிரல் வழியாக ஜலம் விழும்படி, அப்பிரதக்ஷிணமாக சுற்றி, காலி சொம்பை ‘ஏதத் கடோதகம்பிப’ எனக்கூறி சொம்பை தெற்கு பக்கமாக கவிழ்த்து வைக்கவும். பின் சொம்பின்மீது சிறிது ஜலம் ப்ரோக்ஷித்து, நிமிர்த்திவைக்கவும். பின்னர் தெற்கு முகமாக ஒரே ஒரு முறை ஸேவிக்கவும். (அபிவாதனம் கிடையாது).

பிறகு, சிறிது எள் எடுத்துக்கொண்டு,  ‘அஸ்மாத் ஸ்தானாத், ப்ரேஹி, இதொகச்ச, யதேஷ்டம் சர’ என்று கூறி எள்ளைச் ஆவாஹனம் செய்த தர்ப்பத்தில் சேர்த்து, தர்ப்பத்தை தெற்குபுறமாக தூர சேர்த்துவிடவும்.

பின்னர், உபவீதம், கைகால் அலம்பி, கைகூப்பி ஸாத்வீகத்யானம் > “பகவாநேவ ஸ்வநீயாம்ய ஸ்வரூபஸ்திதி ப்ரவ்ருத்தி ஸ்வஷேதைகரஸேந அநேந ஆத்மாநாகர்த்ரா ஸ்வகீயைஸ்ச உபகரணை: ஸ்வாராதனைக ப்ரயோஜனாய பரமபுருஷ: ஸர்வ ஸேஷீ ஸ்ரிய: பதி: ஸ்வஶேஷ பூதமிதம் __________________(கோத்ரஸ்ய/கோத்ராயா) ___________________ (ஶர்மண: / நாம்ன்யா) ப்ரேதஸ்ய/ப்ரேதாயா தஸமதினே திலோதக ப்ரதானார்க்யம் கர்ம ஸ்வஸ்மை ஸ்வப்ரீதயே ஸ்வயமேவ காரிதவான்’பின்பு பவித்ரத்தை பிரித்து போட்டுவிட்டு, இரண்டுமுறை ஆசமனம் செய்யவும். க்ருஹத்திற்குள் நுழையுமுன், கால் அகலம்பிக் கொள்ளவும். பின்னர் ஸ்நானம், உலர்ந்த வேஷ்டி/உத்ரீயம், திருமண் – ஸ்ரீசூர்ணம் தரித்து, சூர்யனை பார்து த்யானிக்கவும். (குழி தர்ப்பணம் பூர்த்தி.)

    TRS Iyengar

    Born on Makara Uthiradam star, native of Mukkur and brought up in Ladavaram village near Arcot and now well settled in Mumbai for over five decades. Presently, at 70, trying to run this website without any commercial expectations or profit motive, just for the sake of our future generations to understand about Sanatana Dharma & Srivaishnavam sampradayam.Within my limited knowledge that I put it here, what I learnt from the world.